சஜித் அணி சபை அமர்வை புறக்கணித்தது ஏன்? ஆளுங்கட்சி வெளியிட்ட தகவல்

” இன்று வீடமைப்பு அமைச்சு தொடர்பான விவாதம் நடக்கவுள்ளது. எனவே, அவ்வமைச்சு பதவியை வகித்த சஜித் பிரேமதாச செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர். ” – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் சபையில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,

” எதிரணியின் செயற்பாடு மோசமாக உள்ளது. சபாநாயகரைக்கூட தாக்குவதற்கு முற்படுகின்றனர். நீங்கள் ஜனநாயகத் தலைவராக இருக்கின்றீர்கள். எதிரணிக்கு அதிக வாய்ப்பை வழங்குகின்றீர்கள். எனவே, உங்கள்மீது கை வைப்பதற்கு எவருக்கும் நாம் இடமளிக்கமாட்டோம்.

எதிரணியனர் ஊடக பிரச்சாரத்துக்காகவும், சர்வதேசத்துக்காகவுமே சபை புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles