பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பியதை கண்டித்தும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முற்பகல் 10.15 முதல் 10.25 வரை சுமார் 15 நிமிடங்கள், அரசுக்கு எதிராகவும், பொலிஸ் அமைச்சருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
