சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள், இதன்மூலம் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா வழங்கப்படும் எனக்கூறி அவர்களை இந்த அரசும், அரசுடன் கூட்டணி வைத்துள்ளவர்களும் ஏமாற்றிவருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மலையக மக்களின் காணி உரிமை கனவு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேறும் எனவும் அவர் கூறினார். மாறாக பெருந்தோட்ட மக்கள் லயன் பகுதியிலேயே முடக்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
பசறையில் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பங்கேற்றிருந்தார். பெருந்திரளான மக்களும் இதில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.