சஜித் ஜனாதிபதியானகையோடு நாடாளுமன்றம் கலைப்பு!

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்றகையோடு நாடாளுமன்றம் கலைக்கப்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘ அரசமைப்பின் பிரகாரம் நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்வு நடத்தப்பட்டாக வேண்டும். செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி இப்போது கூறவேண்டியதில்லை. அவர் கூறாவிட்டாலும் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார். நவம்பர் மாதம் அவர் பதவிப்பிரமாணம் செய்வார். அதன்பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2025 ஜனவரி, பெப்ரவரியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles