” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிய ஆதாரங்களை நான் முன்வைத்துவிட்டேன். எனவே, அவர் உடன் பதவி விலக வேண்டும்.” – என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே .
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என நான் சுட்டிக்காட்டிருந்தேன். நிர்வாக சபையின் அனுமதி இன்றி 10 பில்லியன் ரூபா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மூவரடங்கிய நீதிபதிகள் குழு வழங்கிய ஆவணத்தில் கையொப்பம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் கூறினார். ஆனால் கையொப்பம் உள்ளது. அதனை நான் சபையில் முன்வைக்கின்றேன். மூவரின் கையொப்பங்களும் உள்ளன.
சஜித் பிரேமதாசவின் மனைவியின் சலூனில் வேலை செய்வதற்கு, அரச பொறியியல் கூட்டுதாபனத்தில் இருந்து ஊழியர்களை எடுத்துள்ளனர். அவர்களுக்கு அரச சம்பளமே சென்றுள்ளது. உள்ளக கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
எனவே, எதிர்க்கட்சி தலைவர் பதவி விலக வேண்டும். ” – என்றார்.