சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி குருணாகலையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணியால் மிகவும் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்படும் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இதுவாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை எதிர்வரும் 15 ஆம் திகதி தாக்கல் செய்த பின்னர், சஜித் பிரேமதாச ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். மறுநாள் (16) முதல் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகும்.
பிரதானக் கூட்டங்களில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து பங்காளிக்கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள். கிராமிய மட்டங்களில் நடைபெறும் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்குவார்கள்.










