சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 22 ஆம் திகதி முன்வைப்பு!

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை என்ன என்பது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வெளியிடவுள்ளது என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பொருளாதார மீட்சி திட்டங்கள், வெளிவிவகாரக் கொள்கை என்பன உள்ளிட்ட விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டியிலிடப்படவுள்ளது. அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் பற்றிய உறுதிமொழியும் வழங்கப்படவுள்ளது.

மலையக தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்களும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles