” எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், சர்வமத அமைப்புகள் என்பன ஓரணியில் திரள வேண்டும். அதற்குரிய பங்களிப்பை வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். ” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியொன்று தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்பீர்களா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.
” நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றம் வந்தேன். நாட்டில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வெற்றிடம் இல்லை. அப்பதவியை கைப்பற்றும் எண்ணமும் இல்லை.
எனினும், பொதுவேலைத்திட்டத்தின்கீழ் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை விரும்புகின்றேன். அதற்குரிய பங்களிப்பை என்னால் வழங்க முடியும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக மாற்று வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டுமெனால் இந்த ஒன்றிணைவு அவசியம்.” – என அவர் மேலும் குறிப்பிட்டார்.