ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (30) இடம்பெற்றுள்ளது.
ஐ.தேகவின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து தனது x தளத்தில் ஒரு பதிவையிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
“ எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.” என தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இச்சந்திப்பு முக்கிய திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.










