சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 8 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 08 பேர் தலைமன்னார், பேசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட 3 இளைஞர்களும் 2 பெண்களும் 18 வயதுக்கும் குறைந்த 3 சிறுவர்களுமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொறவெவ, வவுனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles