சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்த 382 பேர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் கடையொன்றில் இருந்து பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரேதமாக சேமித்து வைக்கப்ட்டிருந்த பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் விசேட பிரிவினராலே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரினால் 200 லீற்றர் டீசல் , 310 லீற்றர் பெற்றோல் மற்றும் ஆயிரத்து 670 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்த 382 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருளை சேமிக்கும் நோக்கில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தந்த ஆயிரத்து 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த (சீ சி ரீ)  பாதுகாப்பு கெமராவின் உதவியுடன் இவ்வாறு பலமுறை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தந்தவர்கள் அடையாங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றின் வாயிலாகவும் இவர்கள்; கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு அடையாளங்காணப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் அவதானிக்கப்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles