சந்தா கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படும்: ஜீவன் தலைமையில் தீர்மானம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சந்தா கணக்கு விபரங்கள் வருடாந்த தேசிய சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இன்று கூடிய தேசிய சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலையில் உள்ள சிஎல்எப் தலைமையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது.

இதன்போது கடந்த சில ஆண்டுகளுக்கான சந்தா கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அடுத்து வரும் தேசிய சபைக் கூட்டங்களில், சந்தா கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles