சனல் – 4 ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
” சனல் – 4 ஊடக நிறுவனத்தின் கடந்தகால செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ‘பப்ளிசிட்டி’காககூட இவ்வாறு செய்திருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் அதில் உள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். மௌலானாவின் பின்புலம் பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது. அவர் புகலிடக் கோரிக்கையாளர், எனவே, அவருக்கு புகலிடம் கிடைப்பதற்கு அவர் வழங்கியுள்ள இந்த தகவல் போதுமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
