” சமஷ்டிகோரும் விக்னேஸ்வரன் சந்தர்ப்பவாதி” – பொன்சேகா சீற்றம்

” இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச்சொல்லுங்கள்” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.

” இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ் முடியாவிட்டால் அவரை இங்கிலாந்து போகச்சொல்லுங்கள்.

விக்னேஸ்வரன் சிங்கள பெண்ணையே திருமணம் முடிந்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படிதான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்கு மக்களுக்காக குரல் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்கின்றார். அவர் சந்தர்ப்பவாதி.” எனவும் பொன்சேனா குறிப்பிட்டார்.

சமஷ்டி தொடர்பிலும், மகாசங்கத்தினர் குறித்தும் சிவி விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துகள் தெற்கு அரசியலில் பெரும் சொற்போரை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் விக்கியை விமர்சித்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles