சமூக வலைத்தளங்களின் முடக்கம் பயனற்றது-நாமல்

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தான் VPN ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும், இதே முறைமையை பலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக சமூக வலைத்தளங்களை முடக்கியது பயனற்ற செயற்பாடாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இது குறித்து அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டுமெனவும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles