சமூக விவகாரம் குறித்த ஜனாதிபதி பணிப்பாளராக கீர்த்தி தென்னகோன் நியமனம்!

தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநரான ரஜித் கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிவில் அமைப்புகள், மனித உரிமைகள், தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய தொழில் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக விவகாரங்கள்,பொருளாதார மறுமலர்ச்சி என்பன தொடர்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் இவருக்கு அனுபவம் உள்ளது. கீர்த்தி தென்னகோன் வெகுஜன தொடர்பு முதுகலைப் பட்டதாரியாவார்.

Related Articles

Latest Articles