தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் சரி செய்யப்படுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிற்றோ மற்றும் லாஃப்ஸ் (Laughs) நிறுவனங்களுக்குத் தேவையான நிதி வசதிகள் வழங்கப்படுமென அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின்தலையீட்டுடன் மேலும் பல விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக வங்கி எரிவாயு கொள்வனவுக்கு 90 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும். லிற்றோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் சந்தை அளவுக்கேற்ப பணம் விநியோகிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.










