சரியானதைச் செய்வது சவாலாகும்… ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம்…

விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே, எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப்பயணிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

கமநலச்சேவை உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று(21) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும். அதன் ஊடாகவே அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும்.

ஒருபோகம் மற்றும் இருபோகத்துக்கு மாத்திரமன்றி, பல சந்ததியினரை பயன் பெறச்செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும். இது தொடர்பில், விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும்.

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அதன் ஊடாகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும். அதற்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதுடன், முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles