நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி இடைக்கால அரசை அமைப்பதற்கு தான் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
புதிய பிரதமர், அமைச்சரவை உட்பட இதர விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வக்கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசில் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கிலேயே, ஜனாதிபதியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.