கறுப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும் மற்றும் வடக்கு, கிழக்கில் அடையாளம் கானப்படும் மனிதப் படுகொலைகளுக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்தில் கிறிஸ்தவ குருமார்கள், காணாமல்போன உறவுகளின் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.