சர்வதேச பட விழாவில் ‘கைதி’

டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’ படம் தேர்வாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜூன் தாஸ், ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் கைதி.

கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மையப்படுத்தி வந்த கைதியின் வெற்றி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நல்ல லாபம் பார்த்தனர்.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் அஜய்தேவ்கான் நடிக்க கைதியை ரீமேக் செய்ய உள்ளனர்.

இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்துக்கு பிறகுதான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜிக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கைதி படம் தேர்வாகி உள்ளது. வருகிற 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. இது கைதி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Articles