சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்காக காலி மக்கள் இன்று ஒன்றுபட்டு நிற்கின்றனர்.தொலைக்காட்சி விவாதங்களுக்கு சஜித் செல்வதற்குப் பயப்படுகிறார்.
ஏனென்றால் சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை. நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது சவாலை ஏற்க முடியாத ஜே.வி.பி இப்போது பரீட்சார்த்தமாக ஆட்சியைக் கோருகிறது. வேறு மாவட்டங்களில் இருந்தே அதன் கூட்டங்களுக்கு மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.










