சாமிமலை பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணைகளை மேற்கொண்டது.

40 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் காணாமல்போயுள்ளார் என அவரின் மனைவியால் ஐந்து நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் தலைமையில் இடம்பெற்றது. சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

செ.தி. பெருமாள், கௌசல்யா, எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles