இலங்கை யானையை நாட்டின் தேசிய விலங்காக அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், யானைகள் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று பிரேமதாச தெரிவித்துள்ளார்.
” எமது யானைகள் என்பதானது இலங்கையின் பாரம்பரியமும் அடையாளத்தினதும் ஒரு பகுதியாகும்.
யானைகளையும் போலவே, அவற்றுடன் வாழும் சமூகங்களையும் பாதுகாத்துக் கொண்டு, சகவாழ்வை நமது தேசிய அர்ப்பணிப்பாக ஆக்கிக் கொள்வோம்.
இலங்கை யானையை நமது தேசிய வனவிலங்காக அங்கீகரிப்போம்!” – எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
