குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 வயது சிறுவன்

இந்தியாவில் மேற்​கு​வங்​கத்​தில் 16 வயது சிறுவன் ஒரு​வன் தனக்கு உடலில் எரிச்​சல் ஏற்​படு​வ​தாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான்.

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்​டம், பெல்​டாங்கா பகு​தி​யில் வசித்து வரும் 16 வயது சிறு​வன் இக்​பால், கடந்த ஒரு மாத​மாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்​களி​லேயே கழித்து வரு​கிறார்.

தண்​ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் தனது உடல் முழு​வதும் எரிச்​சல் ஏற்​படு​வ​தாக​வும், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்​கொண்​டதைப் போல உணர்​வ​தாக​வும் கூறுகிறார். இதனால் குளத்​திலிருந்து வெளியேவர மறுத்து தொடர்ந்து தண்​ணீரிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

உடல் பரு​ம​னாக இருக்​கும் இக்​பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்​களில் மிதந்​த​படி காணப்​படு​கிறார். சில நேரங்​களில் ஒரு குளத்​திலிருந்து மற்​றொரு நீர்​நிலைக்​கும் அவர் செல்​வ​தாக அப்​பகுதி மக்​கள் தெரி​வித்​தனர்.

சிறு​வனின் உடல்​நிலை குறித்து கவலை அடைந்​துள்ள அவரது பெற்​றோர், ஏற்கெனவே அவரை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்றதாகவும், ஆனால் அவரது உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட​வில்லை என்​றும் தெரி​வித்​தனர்.

மேலும், நீண்​ட​கால சிகிச்​சைக்​கான செலவை தங்​களால் சமாளிக்க முடிய​வில்லை என்​றும், சிறு​வனுக்கு உரிய மருத்​துவ சிகிச்சை கிடைக்க உதவு​மாறும் அவர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

நீண்ட நாட்​களாக தண்​ணீரில் இருந்​த​தால் இக்​பாலின் கை, கால்​களில் உள்ள தோல் வெளிறிய நிலை​யில் காணப்​படு​கிறது. இருப்​பினும், அவர் தண்​ணீரை விட்டு வெளியே வர தொடர்ந்து மறுத்து வரு​கிறார்.

நீண்ட நேரம் தண்​ணீரில் இருப்​ப​தால் தோல் மற்​றும் பூஞ்​சைத் தொற்​றுகள் உள்​ளிட்ட பல்​வேறு உடல்​நலப் பிரச்​சினை​கள் ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக கொல்​கத்​தாவைச் சேர்ந்த மருத்​து​வர்​கள் தெரிவித்​தனர்.

இதற்​கிடையே, மாவட்ட நிர்​வாகம் உடனடி​யாக தலை​யிட்டு இக்​பாலுக்கு விரை​வில் உரிய மருத்​துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்​டும் என்று அப்​பகுதி மக்​கள்​ வலியுறுத்தி​யுள்​ளனர்​.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles