22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பிற்பகல் நடைபெற்றது .

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய கூறியது:

“உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்குச் சட்டத்துறையினர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணங்களை ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். எமது தூதுக்குழுவில் சுமார் 20 பேர் வரை கலந்துகொண்டனர்.

இவ்வாறானதொரு முக்கிய மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர், பரந்தளவிலான கலந்தாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.

சட்டத்தரணிகள் மட்டுமன்றி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் இக்கலந்தாய்வு அமைய வேண்டும்.

அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களையும் உள்வாங்கி, இந்த உத்தேச முன்மொழிவு குறித்து மீண்டும் பரிசீலித்துச் சரியான முடிவை எட்ட முடியும் என நம்புகிறோம்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக நீண்டகாலமாகக் குரல்கொடுத்து வரும் ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல் தலைவராக ஜனாதிபதி திகழ்வதால், தங்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அவர் கவனமாகப் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கிறோம்.” – என்றார் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles