பதுளை மாவட்டத்தில் பசறை, மீதும்பிட்டிய,மடூல்சீமை உட்பட பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பிற்பகல் வேளையில் பரவலாக மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக நிலவிய கடும் வெப்ப சலனம் காலநிலை நீங்கி – ஓரளவிற்கு மீதமான வானிலை நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கடும் வெயில் காரணமாக ஆறுகள், குளங்கள் மற்றும் நீரோடைகளில் நீர் வற்றி வரட்சியான காலநிலை ஏற்பட்டிருந்தது. மீதும்பிட்டிய “சீ” பிரிவு உட்பட பல பகுதிகளில் குடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்பட்டது.
தொடர்ந்து இரு நாட்களாக பிற்பகல் வேளையில் பெய்துவரும் மழையின் காரணமாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அத்துடன் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பருவம் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மீண்டும் தொடர்ந்து வேலை வழங்க வாய்ப்பு ஏற்படும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பசறை நிருபர்
