07 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்தை’ (Caution level) எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்

போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் (Hydrated) வைத்துக்கொள்ள வேண்டும்.

நேரடியாக வெயிலில் அதிக நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான வெப்பம் நிலவும் நேரத்தில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும்.

Related Articles

Latest Articles