சாமிமலை, கவரவில்ல பகுதியில் மூவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
38, 42 மற்றும் 48 வயதுகளுடைய மூன்று ஆண்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் சிகிச்சைபெற்றுவருவதுடன், மேலும் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










