கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு அருகில், புப்புரஸ்ஸ – கலஹா பிரதான வீதியில் ஜீப் வண்டியொன்று நேற்று மாலை வீதியைவிட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்தையடுத்து மக்களும், பொலிஸாரும் இணைந்து கடும் சிரமத்துக்கு மத்தியிலேயே வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
காயமடைந்தவர்கள் புப்புரஸ்ஸ பன்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு ஆக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சாரதி மது அருந்திய நிலையில், வாகனம் செலுத்தியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
