சார்ள்ஸ் மன்னர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இந்நிகழ்வில் முதல்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

Related Articles

Latest Articles