சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் தடம் பிளர்வு! மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு!!

ஹட்டன், சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் தடம் புரண்டதால் மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (21) காலை ஆறு மணிக்கு புறப்பட்டு வந்த ரயிலே சிங்கமலை சுரக்க பகுதியில் 109 வது மைல்கல் அருகில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகளும்.கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த புகையிரம் கொட்டகலை புகையிரத நிலையத்திலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரம் ஹட்டனிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது புகையிரதத்தினை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மிக விரைவில் மலையகத்திற்கான புகையிரத சேவையினை வழமைக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles