உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கோஷ்டி மோதலாகி, வீடொன்றும், வாகனங்கள் மூன்றும், மோட்டார்சைக்கிள் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் 14-02-2021ல் (இரவு12மணி) நடுநிசியில் இடம்பெற்றுள்ளது.
ஹாலி-எலைப்பகுதியின் அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்தின் இரண்டாம் பிரிவில், மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுமோசமாக இத்தாக்குதல்கள் இடம்பெற்றமையினால், மேற்படி பெருந்தோட்ட மக்கள் பலரும், தேயிலை மலையில் ஆங்காங்கே மறைந்திருந்தனர்.
மேற்படி இருதரப்பினரில் ஒருதரப்பினர் அரசதுறையிலும் இருவர் தொழில் செய்தும், மறுதரப்பில் அரசியல்வாதியாக ஒருவரும் இருந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அட்டாம்பிட்டிய பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிரபுலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட இருதரப்பினருக்கும், ஏற்பட்ட இழப்பீடுகளை சீர்செய்துகொள்ளவும், சமாதானமாக போவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.செல்வராஜா பதுளை










