” மலையகத்தின் சிரேஷ்ட அரசியல் – தொழிற்சங்க வாதியும், கல்வி ஆளுமைகளில் ஒருவருமான அந்தனி லோரன்ஸ் அவர்களின் இழப்பானது, மலையக சமூகத்துக்கு பேரிழப்பாகும்.
சிறந்த முற்போக்கு சிந்தனைகொண்ட லோரன்ஸ் அவர்கள், மலையகத்தில் சமூக மாற்றத்துக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அவரின் இழப்பால் துயரில் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.”
இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.










