சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஆட்சி அமைக்க முடிந்தது-பிரதமர்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அருகில் வைத்து செயற்படுவதே சிறந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 5 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு தாமரை தடாகக் கேட்போர் கூடத்தில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஆட்சி அமைக்க முடிந்தது.

அதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படை வாத கட்சிகளின் ஆதரவின்றியே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்ததாகப் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles