இஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் அக்கறைகொள்ள வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணம் நாடளாவிய ரீதியில் சிறுவர்களினதும் பெண்களினதும் பாதுகாப்பு தொடர்பான ஆழமான கலந்துரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்குவதற்கோ அல்லது சட்ட மறுசீரமைப்புக்களை செய்யவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுளு;ளார்.
அதற்கு நிபந்தனைகளுமின்றி முழுமையான ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவர் தலதா அத்துகோரள தலைமையிலான அதன் உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.