‘சிறுமி மர்ம மரணம்’ – சம்பந்தப்பட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் குழுவினர் இதனை வலியுறுத்தி உள்ளனர்.

சிறுமி பணிபுரிந்த வீட்டில் அவருக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்புணர்வு கொடுமைகள் மற்றும் அவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் அழுத்தங்கள் மற்றும் இந்த சம்பவத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் உதயகுமார் மற்றும் வேலு குமார் ஆகியோர் இந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் குழுவினர் இதனை வலியுறுத்தி உள்ளனர்.

குறித்த சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும்வரை தமிழ் முற்போக்கு கூட்டணி அழுத்தங்களை பிரயோகிக்கும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles