‘சிறுவர் துஷ்பிரயோகம்’ – செந்தில் தொண்டமானின் தலையீட்டால் விசாரணை குழு அமைப்பு

இரத்தினபுரி, பலாங்கொடை கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஓபநாயக்க பகுதியிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில்  அதிபர், 10 வகுப்பு மாணவர் ஒருவரை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியாக பொலிஸில் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளதுடன், அதிபரை உடனடியாக பதவி நீக்குமாறு கோரி, பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதையடுத்து, குறித்த அதிபர் ஓபநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பலாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் இ.தொ.காவின் பலாங்கொடை அமைப்பாளர் ரூபன் பெருமாள் இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தத்தை அடுத்து மாகாண பணிப்பாளர் குருப்பு ஆராய்ச்சியுடன் கலந்துரையாடி உடனடியாக அதிபருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன் பாடசாலையின் செயற்பாடுகளையும் திங்கட்கிழமைமுதல் வழமைக்கு கொண்டுவர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை விசாரணை குழு கூடிய அதிபர் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

Related Articles

Latest Articles