சிறைக்குள் ‘செல்பி’ – உருவானது புதிய சர்ச்சை!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை எம்.பியை சந்திப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண எம்.பி. நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
அங்குசென்று ரஞ்சனிடம் சுகநலம் விசாரித்த அவர், ‘செல்பி’யும் எடுத்துக்கொண்டு, அதனை முகநூலில் பதிவிட்டார். அந்த படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் சிறைக்குள் செல்பி எடுப்பதற்கு அனுமதி வழங்கிய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை, ஹர்சன எம்.பி., தவறாக பயன்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles