சிவனொளிபாத மலையில் 10 தொன் குப்பைகளை குவித்த யாத்திரிகர்கள்!

சிவனொளிபாதமலை யாத்திரை தொடங்கி மூன்று மாத காலத்துக்குள் 10 தொன்னுக்கு அதிகமான பிளாஸ்டிக், பொலித்தின் உட்பட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

வார இறுதி விடுமுறையுடன் ஹட்டன் வழியாக சிவனொளிபாத மலைக்கு வந்த யாத்திரிகர்களில் சிலர் மலையேறும் வழியில் பெருந்தொகையான பிளாஸ்டிக் போத்தல்கள்,பொலிதின் மற்றும் திடகழிவுப் பொருட்களை வீசிச் சென்றுள்ளனர்.

பிளாஸ்டிக் போதல்கள், பொலிதின் மற்றும் திடக்கழிவுப் பொருட்களை போடுவதற்கு வழி நெடுகிலும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதில் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் போடாமல் வழியின் இருமருங்கிலும் வீசி எறிந்துள்ளதாக அந்த இடங்களை சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles