சிவலிங்கத்தை தரிசிக்கும் வெள்ளை நாகம் – யாழில் பக்திமயம்….!

யாழ்ப்பாணம் – வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால் வேயப்பட்ட சிறு கோவிலிலேயே குறித்த காணொளி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறு அம்மன் கோவிலில் பிள்ளையார் , சிவலிங்க உருவச் சிலைகளும் இலட்சுமியின் உருவப்படமும் வைத்து காணப்படுகிறது.

பௌர்ணமி தினங்களில் பாம்புகள் அடிக்கடி குறித்த ஆலயத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்தினர் அவ்வாறு ஒரு முறை வந்தபோதே குறித்த காணொளியை எடுத்ததாகவும், குறித்த கோவில் அமைந்துள்ள காணி உரிமையாளர் கோவிலை கவனமாக பராமரிக்குமாறும் கோரி காணொளியை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

Latest Articles