சீதுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

சீதுவையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டுகொட – சீதுவ வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரிகள் கைத்துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்தொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles