” இந்த அரசு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பெருந்தோட்டத்துறையில் 12 இலட்சம் பேர் வேலை செய்தனர். இன்று அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அவர்களும் தொழிலுக்கு செல்வதற்கு தயாரில்லை. ஏனெனில் பிரச்சினைகள் அதிகம்.
எனவே, சீன பெண்களை அழைத்துவந்து, அவர்களுக்கு கூடை போட்டு – கொழுந்து பறிக்க சொல்லுங்கள். அரிசி மட்டுமல்ல தேயிலையைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்கமதி செய்யவேண்டிய நிலைமை வரலாம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 700 ரூபா வழங்கப்பட்டபோது 30 நாட்கள் வேலை வழங்கப்பட்டன. ஆனால் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் 12 நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கம்பனிகளுக்கு சார்பாகவே வர்த்தமானி அறிவித்தல்கூட வெளியிடப்பட்டுள்ளது.”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்டார்.
