சீன வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்கா அழைப்பு!

சீனாவின் புதிய வெளிவிவகார அமைச்சரான Wang Yi ஐ தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.

உலகில் பிரதான இரு வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிவரும் நிலையிலேயே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளமை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அழைப்பை அவர் ஏற்பார் எனவும் நம்புகின்றது. எனினும், பயணத்துக்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

சீன வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட Qin Gang திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் இராஜதந்திர மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த மாா்ச் 12-ஆம் திகதி வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற Qin Gang,  சீன வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்திவந்தார். இதனால், அவருக்கும் சீன ஜனாதிபதி  Xi Jinping இற்கும் இடையில் கருத்து மோதலும் ஏற்பட்டது.

இந்நிலையில் Qin Gang ஓரங்கட்டப்பட்டு வந்தார். சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்கவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வெளிவிவகார அமைச்சா் பதவியில் இருந்து அவா் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக ஏற்கெனவே வெளிவிவகார அமைச்சராக இருந்த Wang Yi நியமிக்கப்படுவதாகவும் கடந்த 25 ஆம் திகதி சீனா அறிவித்தது.

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வெளிவிவகார அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) உள்ளிட்டோா் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு, நாடு திரும்பி இருந்த நிலையிலேயே சீனா, வெளிவிவகார அமைச்சரை மாற்றியிருந்தது.

இந்நிலையிலுயே புதிய வெளிவிவகார அமைச்சரவை சந்திப்பதற்கு அமெரிக்கா தயாராகிவருகின்றது.

Related Articles

Latest Articles