சீன வேவு பலூனுடன் ‘செல்பி’ எடுத்த அமெரிக்க விமானி

அமெரிக்க விமானி ஒருவர் சீனாவின் வேவு பலூனுடன் எடுத்துக்கொண்ட செல்பி படத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

அது தென் கரோலைனா கடற்கரைக்கு அப்பால் பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் எடுக்கப்பட்டுள்ளது.

விமானி விமானத்தில் பலூனுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது அதை எடுத்துள்ளார். பெரிய வெள்ளை பலூன் அந்தப் படத்தில் அருகில் தெரிகிறது.

அமெரிக்காவில் சீனாவைச் சேர்ந்த அந்த பலூன் உலா வந்த விவகாரம் இரு வாரங்களுக்கு முன்னர் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே அது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அது வேவு பலூன் அல்ல வானிலையை ஆராய அனுப்பப்பட்டது என்று சீனா குறிப்பிட்டது.

பலூனை அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதம் 4ஆம் திகதி சுட்டு வீழ்த்தினர்.

Related Articles

Latest Articles