சீனாவிடம் ஆயுதம் கோருகிறது ரஷ்யா!

சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், “ரஷியாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கள்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா சிறப்பு நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.

உலக நாடுகள் ரஷிய தாக்குதலை மனித உரிமைகள் மீறல் என்று கண்டித்து வருகின்றன. இந்நிலையில், ரஷியா மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதால், சீனா ரஷியாவுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவது கடினம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் இதுவரை ரஷியாவை கண்டிக்காத சீனா, உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளும் பேச்சு மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது.

இன்னும் ரஷியாவின் கோரிக்கைக்கு சீனா தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles