சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வர்த்தக, வாணிப மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இன்றளவில் நாட்டு சந்தையில் சீனியின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது உலகச் சந்தையுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ள முடியாத அதிகரிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
