சீரற்ற காலநிலை – மத்திய மாகாணத்தில் 449 குடும்பங்கள் பாதிப்பு – 78 வீடுகளுக்கு சேதம்

சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவால் நேற்று மாலைவரை 78 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 44 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 34 வீடுகளுமே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

அதேவேளை, சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles