சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருகின்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, மாணவர்களின் நலன்கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் மாத்தறை மாவட்ட செயலகத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோர் தலைமையில்
இன்று நடைபெற்றது. இதன்போதே இது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.










