கொழும்பு உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் பலியாகியுள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.